2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

'சரணடைந்தவர்களை நாங்கள் கொலை செய்யவில்லை'

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.

 

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் ​கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான​ ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கருத்தை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X