Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதி இல. 07 படி, தமிழ்மிரர் ஊடகவியலாளரால், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரப்பட்டிருந்தது.
இறுதி யுத்தத்தின்போது புலிகள் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்த இராணுவம், புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பானத் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியுமென பதிலளித்திருந்தது.
இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதால், இது தொடர்பில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இன்று(03) மேன்முறையீடு செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .