2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சரத் பொன்சேகாவுக்கு விசேட போக்குவரத்து வழங்க நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெனரல் சரத் பொன்சேகா விசேட இராணுவ வாகனத்தில்  மாத்திரமே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் என்பதுடன், சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ்ஸில் அழைத்து வரப்படக் கூடாது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கொழும்பு  நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டப்பட்டிருந்த போதிலும், இன்று அவர் சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்தே, ஜெனரல் சரத் பொன்சேகா விசேட இராணுவ வாகனத்தில்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

எதிர்வரும் காலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் எனவும் மேலும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு அவரது குடும்பத்தினர் உணவுப் பொருள்களை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்திருந்த காலப்பகுதியில் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--