2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொ​ரோனா தொற்றால், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்ள முடியாதவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களாக கருதி, வாக்களிப்பதற்கு அனுமதிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் வாகன திணைக்களத்தால்  காலாவதியான அனுமதிபத்திரங்கள் செல்லுபடியாவதற்காக வழங்கப்பட்டுள்ள நிவாரண காலத்துக்காக அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்களிப்பதற்காக பயன்படுத்த முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச்சிலிருந்து ஜூன் வரையான காலப்பகுதிக்குள் காலலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக ஜூன் மாதத்திலிருந்து செப்டெம்பர் வரை நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--