Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஆட்சி செய்யும் தேவையோ, அதனை பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்கும் தேவையோ அரசாங்கத்துக்கு இல்லை என, பாதுகாப்பு இராங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசகரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது, அவசரகால சட்டத்ததை நீடிப்பதா இல்லது முடிவுக்கு கொண்டு வருவத என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படை மற்றும் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினார்.
அதன்போது மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனைவிட ஓகஸ்ட் மாதம் பெரேஹரா மற்றும் கிறிஸ்தவ நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க அவசரகால சட்டம் அவசியம்.
அவசரகால சட்டத்தை நீக்கினால் முப்படையினர் தமது முகாம்களுக்கு திரும்பிச்செல்ல நேரிடும். பெரெஹா உள்ளிட்ட சமய நிகழ்வுகளுக்கு பொலிஸாருடன் முப்படையினரின் பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதலை சஹரான் குழுவினரே நடத்தியமை தெளிவாகியுள்ளது. வெலிசறை முகாமுக்கு அமெரிக்க புலனாய்வு பிரிவினர் சென்றதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார். ஐ.எஸ். பயங்கரவாதம் என்பது சர்வதேச ரீதியில் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, அமெரிக்க மாத்திரமின்றி பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவேதான் அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் செவல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்றார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago