2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சர்வதேச பொலிஸாரால் சந்தேக நபர் கைது

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் ஒருவர், சர்வதேச பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை- கல்கிஸ்ஸ நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான தனஞ்சய டீ சில்வாவின் தந்தையுமான, ரஞ்சன் டீ சில்வா வின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சர்வதேச பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், இந்த கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்தவரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ரஞ்சன் டீ சில்வா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .