2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரி பொறியியலாளருக்கு கொரோனா

Niroshini   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து. அவரது மனைவியான சட்டத்தரணியிடம், நாளை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சட்டத்தரணி, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்ற கட்டடத் தொகுதிகளுக்கு சென்றுள்ளார் என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் சட்டத்தரணி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .