2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சஹ்ரானின் மனைவி உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி உட்பட ஐவரை, எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோடை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, நேற்று (21) உத்தரவிட்டார். 

மேற்படி ஐவரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (21) முன்னிலையான போது அவர்களை, குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே நீதவான் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டதுடன், தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலானாய்வு விசாரணைப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 

18 மாதங்களா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி அறுவரையும், நேற்று (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .