Editorial / 2020 ஜனவரி 07 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் திரு.ராஜா, திரு.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதாரண விடுப்பு வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை நீதிமன்றத்தை அணுகியே சாதாரண விடுப்பில் சென்றுள்ளதாகவும், அவர் சிறைக்கு திரும்பும்வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதனையடுத்து, ரவிச்சந்திரனுக்கு வரும் 10ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago