2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் டொனேடோ தாக்கம்; வீடுகள், கட்டடங்களுக்குச் சேதம்

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் – இரணவில பிரதேசத்தில் திடீரென வீசிய வேகமான சுழல் காற்றின் காரணமாக வீடுகள், கட்டடங்கள் சில பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இன்று (12), அதிகாலை 1.15 மணியளவில் வேகமான சுழல் காற்று வீசியதாகக் குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் இரணவில பிரதேசத்திலுள்ள மீனவர் வாடிகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், தற்பொழுது தற்காலிகமான வாடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

டொனேடோ வகையான சுழல் காற்றே சிலாபம் நகரை கடந்துச் சென்றுள்ளதாக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .