2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீட் பெல்ட், காற்று பலூனற்ற வாகன இறக்குமதிக்குத் தடை

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருக்கைப் பட்டிகள் (சீட் பெல்ட்) மற்றும் காற்று பலூன் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்புக்கான நடைமுறைகள் அற்ற வாகனங்களை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் கொள்வனவு செய்யத் தடை விதிக்கவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதென, அமைச்சு தெரிவித்தன.

கடந்த சில காலமாகவே, வாகனங்கள் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில், சுத்தமோ அல்லது பசுமையோ பேணப்படவில்லை. நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களும், எதிர்வரும் 2040இல், எரிபொருளில் இயங்குவதைத் தவிர்த்து, ஏனைய சக்திகள் மூலம் இயங்குபவையாக மாற்றப்படும்.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசின் அனைத்து வாகனங்களையும் எதிர்வரும் 2025இல், ஹைப்ரிட் அல்லது மின்சாரத்தில் இயங்குத் வாகனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அமைச்சு மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .