2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

என் மனதில் இப்பவும், எப்பவும் அவர் ஒரு

Editorial   / 2026 பெப்ரவரி 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் அவர்கள் எனக்கு ஒரு "முன்னாள்" பிடித்த நடிகர்.நான் இருபதுகளில் இருந்தபோது அவரது நடிப்பில் வெளியாகிய அத்தனை படங்களும் எனக்கு பிடித்தவை. "பூவே உனக்காக " பார்த்துவிட்டு கல்லடி கடற்கரையில் தனியாக இருந்து விஜய்க்காக கலங்கிய நாட் டகள். "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின் பாடல்களை ஒலிநாடா தேய தேய கேட்ட நாட்கள். சிம்ரன் அவர்களை பிடித்த நடிகையாக கொண்டாடிய நாட்கள். "லவ் டுடே " பேசிய யதார்த்தம், உணர்ந்த நாட்கள். "வசீகரா" எத்தனை தடவைகள் பார்த்தேன் என்று கணக்கே இல்லை. "குஷி படத்தில் " அவர் நடாத்திய இடுப்பு ரகளைகள். இப்படி இன்னும் பல. என் மனதில் இப்பவும், எப்பவும் அவர் ஒரு "romantic hero" தான். இதாலதான், அவர் கொஞ்சம் கொஞ்சமாய், அடிதடி வகையறாவுக்குள் போனபோது என்னால் ஏற்கவே முடியல. ஆனால், அடிதடி + காதல் கலந்து அவர் தந்த "கில்லி" இன்றைக்கும் number 01 "கொத்துரொட்டி"... இன்னமும் அந்த சூடும் சுவையும் இருக்கு நாவில். பிறகு "காவலனில்" அவர் காதலனாக வந்தபோதும், அந்த பழைய "கிக்" இல்லை. அவர் அரசியலுக்கு வரும்போதே நினைத்தேன். சங்கீதாவின் divorce எப்பவோ எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அதனை, இந்த காலத்தில் செய்திருப்பது, அவரின் மன ரணத்தை காட்டுகிறது. இதுவும் ஒரு "வச்சு செய்தல்" தான். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், குடும்ப பெண்கள் பெண்கள்தான். இது அவரின் தனிப்பட்ட "வச்சு செய்தலா" அல்லது அவரின் அரசியல் எதிரிகள் வைத்த சூனியத்தில் இவரும் பங்காளியா தெரியல. ஆனால் அவரின் அரசியல் எதிரிகளின் திட்டத்தில் சங்கீதா இருந்தால் உங்களுக்கும், 50 தாண்டி கன நாள் விஜய். அந்த பிள்ள திரிஷாவும் உங்களுக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது. பேசாம சட் புட் என்று உங்க காரியத்தை பாருங்க. காசு நிறைய இருக்கு. பேசாம ஒதுங்குங்க. Instagram இல் நீங்க ரெண்டு பேரும் ரிலாக்ஸ் ஆ life ஐ enjoy பண்ணும் படங்களை எதிர்பார்க்கிறேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .