2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை

Editorial   / 2026 பெப்ரவரி 28 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ளார். எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கும் விஜய்க்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. விவாகரத்து கேட்ட சங்கீதா: ஆனால், அவருக்கு வரும் தேர்தலில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையே நெருக்கடியாக மாறியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த காரணத்தாலே அவரிடம் இருந்து விவகாரத்து கோருவதாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யார் அந்த நடிகை? இது தவெக தொண்டர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகளவு கொண்டவரான விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா குற்றம் சாட்டியுள்ள அந்த நடிகை மூன்று எழுத்து கொண்ட நடிகை என்று கூறப்படுகிறது. காதல் நாயகனாக திரையில் உலா வந்த விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் அந்த நடிகை. அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த வருடங்களில் அவர் இணைந்து நடித்துள்ளார். அப்போது, விஜய்யுடன் அவர் நடித்த படங்களில் ஒரு படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த சமயங்களிலே இவர்கள் இருவர் இடையேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், விஜய்யுடன் இணைந்து அவர் சுமார் 10 ஆண்டுகள் வரை இணைந்து நடிக்காமலே இருந்துள்ளார். வெளிநாட்டில் சுற்றினாரா விஜய்? பின்னர், மீண்டும் விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதை அறிந்த சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியது. சங்கீதா பிரிந்து சென்ற பிறகே மீண்டும் விஜய் அந்த நடிகையுடன் நடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. சங்கீதா தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் விஜய் அந்த நடிகையுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாகவும், அந்த புகைப்படங்களை அந்த நடிகையே தனக்கு அனுப்பியதாகவும், பொருளாதார ரீதியாகவும் தனக்கு நெருக்கடி அளித்ததாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 12 பக்கங்கள் கொண்ட மனுவை சங்கீதா தாக்கல் செய்துள்ளார். ரசிகர்கள் அதிர்ச்சி: தங்கள் வீட்டில் ஒருவராக விஜய்யை பல பெண்களும் கருதி வரும் நிலையில், அவர் மீதான இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. இந்த பிரச்சினையை விஜய் எவ்வாறு கையாளப்போகிறார்? என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. #entertainment #FamilyDrama #familystory #drama

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .