2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

சு.க - ஐ.தே.க இன்று பேச்சு

Yuganthini   / 2017 ஜூன் 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யொஹான் பெரேரா   
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று, அலரிமாளிகையில், இன்று திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை  தாங்குவர். அத்துடன் இந்தக் கூட்டத்தில், இரு கட்சிகளினதும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்று,அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

“குறித்த கூட்டம், திங்கட்கிழமை இடம்பெறும் என்பது ஏற்கெனவே முடிவாகியிருந்த போதிலும், அதில் ஜனாதிபதி பங்கேற்பார் என்பது, ​சனிக்கிழமை (17) அன்றே உறுதியானது. ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமையால், சு.கவின் அமைச்சர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்வர். எனவே, இது விசேட  கூட்டமாகக் கருதப்படுகின்றது” என்று அவர் கூறினார்.

எனினும், குறித்த கூட்டத்தில் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று, அமைச்சர் கருத்துத் தெரிவிக்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .