2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பாடகர் இராஜ் வீரரட்ன தடுத்து வைப்பு

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை விமான நிலையத்தில் தன்னைத் தடுத்து வைத்திருந்ததாக இலங்கையின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான இராஜ் வீரரட்ன தெரிவித்தார்.

இன்று காலை தான் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது, அங்கு குடிவரவு அதிகாரிகளால் தான் 6 மணித்தியாலங்களாகத் தடுத்து வைக்கப்பட்டதாகவும், பின்னரே செல்வதற்கு தனக்கு  அனுமதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மேற்படி  தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் தன்னிடம் மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை எனவும் இராஜ் வீரரட்ன குறிப்பிட்டார்.

தனது கடவூசீட்டை பார்வையிட்ட கடமையிலிருந்த குடிவரவு அதிகாரி ஒருவர், சிங்களவரா அல்லது தமிழரா என்று தன்னிடம் வினவியதுடன், இந்த நாட்டில் வந்து என்ன செய்யப் போகிறாய் என்று பேசியதாகவும் இராஜ் வீரரட்ன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--