2020 ஜூன் 03, புதன்கிழமை

ஜப்பானுக்கான விமான சேவை இரத்து

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் வீசிய புயல் காரணமாக நரிடா சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீ லங்கன் விமான சேவை இன்றும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான்-நரிடா நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 460 விமானமே இவ்வாறு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை 109411 777 19 79 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு நரிடா சர்வதேச விமான நிலையத்ததை நோக்கிச் செல்லவிருந்த யு.எல் 460 விமானம் இன்று அதிகாலை 2.35 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X