2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணை; 3 மாதத்துள் மூன்றாவது இராணுவ நீதிமன்றம்

Super User   / 2010 மே 27 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் மூன்றாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்படவுள்ளது என்று இராணுவ தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

  இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த மூன்றாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்படவுள்ளது. 

இதற்கான நடவடிக்கைகள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்நிலையில் குறித்த ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான சுமார் 5,000 ஆவணங்கள் மீதான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் மெளும் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--