2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

டி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

J.A. George   / 2020 நவம்பர் 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியம்பலாண்டுவ, கொடயான, தொம்பகஹவில பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த நிலையில், குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தவலையை அடுத்து, நேற்று (25) தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

53 வயதுடைய குறித்த நபர் 12 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளதாகவும்,  அந்தக் காலப்பகுதியில் குறித்த துப்பாக்கியை திருடியிருக்கலாம் என்ற பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .