2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

தங்கத்துடன் விமானப்படை வீரர் கைது

George   / 2017 ஜூன் 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மில்லியன்  ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வௌியில் கடத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை வீரர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் கடமையாற்றும் வீரர் என, விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

வௌிநாட்டிலிருந்து வந்த நபருடன் சந்தேகப்படும் விதத்தில் குறித்த வீரர் நடந்துகொள்வதை சீ.சீ.டிவி கமராவில், சுங்க அதிகாரிகள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபரை சோதனையிட்டு கைதுசெய்துள்ளனர்.

தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான விமானப்படை வீரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ​அளவு 2 கிலோகிராம் என, விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .