2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா?’

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையினூடாக, தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய, அரசாங்கம் முயல்கிறதாக என, தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்றும் குறித்த அறிக்கை, பௌத்த அமைப்புக்கள் நாட்டில் அடிப்படைவாதத்தை தூண்டுகிறது என்ற தவறான நிலைப்பாட்டை, சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“குண்டுத்தாக்குதல், சம்பவத்தைத் திட்டமிட்டது யார் என்ற உண்மை காரணியை ஆணைக்குழு பகிரங்கப்படுத்தவில்லை. இதை, அறிக்கையின் பிரதானக் குறைப்பாடாக கருத வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய விடயங்கள் ஏதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

“விசாரணை அறிக்கை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பௌத்த அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றும்  அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர், அடிப்படைவாதத்துக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் செயற்பட்டுள்ளன என்றும் இதைத் தவறு என்று கூறமுடியாது என்றும்  அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான உண்மை தன்மையை, அரசாங்கம் பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு எதிராக பௌத்த தேரர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என்றும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X