J.A. George / 2021 மே 04 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.
கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்துக்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன.
இதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.
இதன்படி, 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago