Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம், அடிப்படை விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு முரணாக இடம்பெறுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக, இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுத் தீர்மானம் எடுப்பதை விடுத்து, விஞ்ஞான ரீதியிலானப் பரிந்துரைக்கு அமைவான முன்னுரிமை பட்டியலுக்கு ஏற்ப, தடுப்பூசி வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
COVID – 19 தடுப்பூசி தொடர்பில் தயாரிக்கப்பட்ட தேசிய தடுப்பூசி ஏற்றும் திட்டத்துக்கு, கடந்த ஜனவரி மாதம் தொற்றுநோய் தொடர்பான தேசிய ஆலோசனை குழு அங்கிகாரம் வழங்கி, உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தடுப்பூசிகளே கிடைக்கும் என்ற அடிப்படையில், முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள், பொருளாதார, அத்தியாவசிய சேவைகளில் அபாயத்தை எதிர்நோக்கியவர்கள் முன்னுரிமை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
எனினும் தெரிவு செய்யப்பட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு தடுப்பூசி ஏற்றப்படுகின்றமை தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியிலான இணக்கப்பாடுகள் மற்றும் முன்னுரிமை பட்டியலுக்கு முரணானது என இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago