Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு பின்பற்றப்படுவது போன்று மேற்கொள்ளப்படும் என கடற்படை அறிவித்துள்ளது.
எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி காலமானார்.
இவ்வாறு காலமானவர் கடற்படை தலைமை நிலையத்திற்கு உட்பட்டதாக கடமையாற்றிய கலேன்பிதுனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான 35 வயது லெப்டினென்ட் கமாண்டர் ( தொண்டர்) தொடம்வல கெதர சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியாவார்.
இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இவர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ப்பட்ட பரிசோதனைகளில் இந்த கடற்படை அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
நோய் நிலைமை அதிகரித்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இந்த அதிகாரி 25ஆம் திகதி காலமானார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் நடைமுறை விதிகளுக்கு அமைவாக இந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Jan 2026
27 Jan 2026