2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தாமதமாகும் வேலைவாய்ப்பு குறித்து கலந்துரையாடல்

R.Maheshwary   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியா நாட்டில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகளில் தோற்றி, அதில் சித்தியடைந்த இலங்கையர்களை, கொரியாவுக்கு அனுப்புவது குறித்த கலந்துரையாடல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்குமிடையில் நேற்று (23) வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கொரோனா தொற்றால் இலங்கைப் பணியாளர்களை கொரியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை தாமதமடைவது குறித்தும் கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களை விரைவாக கொரியாவுக்கு அனுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரின் ஆலோசனைக்கமைய, கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நாளை மறுதினம் கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்துடன் விசேட கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இக்கலந்துரையாடல் ஊடாக 5,438 இலங்கையர்களை கொரியாவுக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .