Editorial / 2018 ஜூலை 23 , மு.ப. 04:29 - 1 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தெரிவிக்கும் கருத்துகளால், நாட்டுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கண்டி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரரை, நேற்று முன்தினம் (21), ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே, தேரர் தேரர் மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார்.
இது குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், யுத்தத்துக்கு பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றதெனவும் இது தொடர்பில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், தமிழர் தரப்பிலிருந்து தங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதெனக் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தக் கோரிக்கையை ஏற்று, நாமும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மக்களின் சில பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருந்தோம்” எனவும், அனுநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
“இதேவேளை, சமஷ்டி ஆட்சிமுறை, மாகாண சுயாட்சி மற்றும் வட மாகாணத்துக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைகளும் தமிழர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன.
“இலங்கையானது, ஒற்றையாட்சி நாடு என்பதால், இவ்வாறான கோரிக்கைகள், ஒற்றையாட்சி முறைமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்தக் கோரிக்கைளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. இது தொடர்பில், உரிய தரப்பினருக்கு நாம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்” என, தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
19 minute ago
28 minute ago
40 minute ago
டிலன் Monday, 23 July 2018 04:02 PM
அப்ப நீங்கள் என்ன தீர்வு தரப்பொறிங்கள்? மேல் குறிப்பிட்டா விடயம் தர மறுத்தால் அது தீர்வு இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
40 minute ago