2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உறுதி

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், துரித நடவடிக்கை எடுக்கப்படுமென்ற வாக்குறுதியை, ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு வழங்கியுள்ளனர் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சட்டச்சிக்கல்கள், வழக்குகளில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்ததாக, சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்க் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் தாமத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விடயத்தில் கூடிய அவதானம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, சட்டமா அதிபர் நாட்டிலில்லாத காரணத்தால், அவரது விளக்கத்தைப் பிரதமரால் பெறமுடியவில்லையென்றும், சட்டமா அதிபர் நாளை நாடு திரும்பியதும், அவரின் அதிபரின் விளக்கத்தைக் கோரி, தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பான இறுதித் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கவுள்ளாரெனவும், சுமந்திரன் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் திருகோணமலை விஜயத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனால், தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவே, இந்த வழக்கில் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை முன்வைக்கவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X