2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார்.

  பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். 

கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், “யுத்தக் குற்றங்களை மறப்போம் மன்னிப்போம்” எனக் கூறியுள்ளமையை நினைவுபடுத்தியதோடு, அவ்வாறான அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து வருகின்றவர்கள், இது விடயத்தில் வாய்மூடி மௌனம் காத்துவருவதாகக் குற்றஞ்சாட்டினார்.  

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எங்களது தமிழ்த் தலைமைகள், சரியான வழியில் இதனைக் கையாள வேண்டியது அவசியமெனவும் சுட்டிக்காட்டிய தவராசா, தற்போதைய அரசாங்கத்தின் கீழ், தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், அரசாங்கத்துக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்துவதாக அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அதனூடாகவே எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிச் செல்லமுடியும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், அந்த அழுத்தம் அல்லது ஒருமித்த முடிவு இல்லாவிட்டால், ஏமாற்று ஐ.நா பிரேரணையே மீண்டும் அமையக்கூடிய நிலைமையே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நிலைமையே காணப்படுகின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .