Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.
“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.
“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
14 minute ago
19 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
56 minute ago