Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதாவது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்த கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கும் ஜே.வி.பியின் விஜித ஹேரத் எம்.பி, சில தருணங்களில் தற்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவையும் மிஞ்சியவராகவே செயற்படுகிறார் என்றும் சாடினார்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையானதொரு திருத்தமென ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதும், நாட்டின் சர்வாதிகார அரசியல் செயற்பாடுகளில் மாற்றமொன்றை ஏற்படுத்தியிருக்கும் திருத்தமெனவும் தெரிவித்தார்.
இருப்பினும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் இருந்த நோக்கத்துக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதெனவும், இன்று நாடு பாரதூரமான பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளதெனவும் தெரிவித்தார்.
அதனால் அரசாங்கத்தின் வருமானத்தை விடவும், அரச கடன், கடன் வடித்தொகை உள்ளதென தெரிவித்த அவர், பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்ய முடியாமையினாலேயே தற்போதைய ஜனாதிபதிக்கு ஜே.ஆர் .ஜயவர்தனவின் நிலைமைக்கு திரும்ப நேரிட்டுள்ளதெனவும் சாடினார்.
20 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
34 minute ago