Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2021 மார்ச் 05 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொற்று நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக 05 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை, இரணவில மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வைத்தியசாலைகளை அமைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, கிளிநொச்சி, அம்பாறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் தலா 400 கட்டில்களை கொண்ட வைத்தியசாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் இரணவில ஆகிய இடங்களில் தலா 200 கட்டில்களை கொண்ட வகையில் வைத்தியசாலைகளை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஐ.டி.எச். வைத்தியசாலையில் தொற்றுநோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்காக சமூக இடைவௌியுடன் கூடிய பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 120 கட்டில்களை கொண்ட வகையில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் இந்த அனைத்து வைத்தியசாலைகளும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
1 hours ago