Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூலை 01 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதை கூறினார்.
“இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று அமைச்சரவை அனுமதி அளித்தது.
தற்போது, குருநாகல் முதல் அனுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலம் அபராதம் செலுத்த முடியும்.
இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம்” என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .