Editorial / 2020 நவம்பர் 23 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் என பல படங்களில் நடிகர் தவசி நடித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார்.
உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று தவசி காலமானார். அவருக்கு வயதுக்கு 60 ஆகும்.
‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான தவசி, தமிழில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தேனி மாவட்டம் சங்கராபுரத்தை பூர்விகமாக கொண்டவர்.
நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக்கின் மூலம் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
மீசை தாடி எதுவும் இல்லாமல் மொட்டை அடித்து உடல் மெலிந்து போயிருக்கும் தவசியின் போட்டோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், நடிகர் தவசியா இது என அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு, தவசி வேண்டுகோள் விடுத்த வீடியோவும் வைரலானது. இதனை பார்த்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதியுதவி செய்தனர்.
இந்நிலையில், நடிகர் தவசியின் உடல் நிலை இன்று மேலும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சற்று முன் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
12 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago