Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 07 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்று (06) இரவு 8.30 நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பகுதியிலிருந்து 3 வெற்றுத்தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் கரவனெல்ல மற்றும் கினிகத்ஹேன வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் வாகனம் வழிமறிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் அடையாள அணிவகுப்புக்காக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
54 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago