2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

துரையப்பாவின் பேரன் பொலிஸ் பிரதானியானார்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகர மேயராகக் கடமையாற்றிய போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த, அல்பிரட் துரையப்பாவின் பேரனான, நிஷான் துரையப்பா ​கனடாவின் பிராந்தியமொன்றின் பொலிஸ் பிரதானியாக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

 ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அந்நாட்டின் பொலிஸ் சபையால், நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டேரியா பிராந்தியத்தின் பீல் நகரில் பிரதி பொலிஸ் பிரதானியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யுத்தக் காலத்தில் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டதுடன் அவரது குடும்பம் கனடாவுக்கு இடம்பெயர்ந்திருந்த ​போது, நிஷான் துரையப்பா 3 வயது குழந்தையாக இருந்துள்ளார்.

இதன் பின்னர் உரிய வயதை அடைந்ததும், பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்ட இவர், கனடாவின் குற்ற விசாரணைப் நடவடிக்கை, போதை ஒழிப்பு விசேட பொலிஸ் படையணியின் இ​ணைந்து 25 வருட அனுபங்களைப் பெற்றதன் பின்னர், இவருக்கு பொலிஸ் பிரதானி பதவி வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X