2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு  கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .