2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவலகம் நாளை முதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவவகம் நாளை முதல் செயற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும்  ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான விசேட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த அலுவலகத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை செய்ய முடிவதுடன், தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட ரீதியில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தலைமையில் குறித்த கண்காணிப்பு நிலையம் செயற்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X