அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள மதுபானசாலையொன்றின் கூரையை உடைத்து உள்ளே சென்று, பியர் அருந்தி விட்டு வெறியில் வெளியேசெல்ல முடியாமல் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த நபரொருவரை நேற்று(25) கைது செய்துள்ளதாக, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை - சமகிகம பகுதியைச் சேர்ந்த மஹிந்த திலகரெட்ன (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள பியர் ஹவுஸ் கூரையை, சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (24) இரவு உடைத்துக்கொண்டு, கீழே இறங்கியுள்ளார்.
அங்கு, இலாச்சியில் இருந்த 2,300 ரூபாய் பணத்தை எடுத்து, தன்னுடைய பொக்டெ்டில் வைத்துகொண்ட அந்தபர், அங்கு அமர்ந்து, பியர்களை குடித்துள்ளார்.
போதை தலைக்கேறவே, அவர், கடைக்குள்ளேயே வெறியில் உறங்கிவிட்டார். விடிந்தது தெரியாமலே அவர், உறங்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதுபானசாலையின் உரிமையாளர், நேற்றுக்காலை, மதுபானசாலையை திறந்து பார்த்த வேளை? நபரொருவர் உறங்கிக்கொண்டிருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து, கதவை இழுத்துமூடிய அவர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்துசெயற்பட்ட பொலிஸார், அந்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
இதேவேளை, அவரை கெப்பிட்டிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னிந்திய நகைச்சுவை நடிகரான வடிவேலு, தமிழ் திரைப்படமொன்றில், இவ்வாறுதான், மதுபான சாலைக்குள் சிக்கிக்கொண்டு, அங்கிருந்த மதுவை அருந்திவிட்டு, மதுபானசாலை உரிமையாளரின் வீட்டுக்கே, தொலைபேசி அழைப்பையடுத்து, தன்னை வெளியில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

7 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
2 hours ago