2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சிவாஜிலிங்கம்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்த விடாது யாழ்.நீ தவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய  தினம் காலை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டவரை நேற்று முழுவதும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பொலிசார் இன்று காலையே யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த அழைத்து வந்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--