Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. முன்னோக்கி செல்ல வேண்டும். அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளன. அதற்கமைய ஜனவரி மாதம் முதல் நாங்கள் முன்னோக்கி செல்வோம்.
நான் இங்கு எந்தநாளும் இருக்க போவதில்லை. புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதே எனக்கு தற்போது காணப்படும் பொறுப்பு.
சஜித் பிரேதமதாச உள்ளிட்ட ஏனையவர்கள் நாடாளுமன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
7 minute ago
17 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
28 minute ago
1 hours ago