2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நீர்வை பொன்னையன் காலமானார்

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராகிய நீர்வை பொன்னையன், இன்று வியாழக்கிழமை மாலை காலமானார்.

சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பன்முகப் பார்வை கொண்ட இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலிலும் உறுதியாகத் தடம்பதித்து நின்றார்.

யாழ்ப்பாணம், நீர்வேலியில் 1930 ஆண்டில் பிறந்த இவர், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டத்தையும் பெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X