2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அழைப்பாணை

Editorial   / 2020 ஜூலை 04 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராகப் போலியான சாட்சிகளை முன்வைத்து மேல்நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்குத் தொடர்பில் வடமேல் கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அத்மிரால் டி.கே.பீ திஸாநாயக்கவினால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, முன்னாள் எம்.பிகளான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X