Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் அவசர, எதிர்பாராத தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடன்பெறும் வரம்பை அதிகரிக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, உலக வங்கி வழங்கும் கடன் தாமதமாகலாம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் ஊடாக அரசாங்கம், 650.15 பில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அதில் சீன அபிவிருத்தி வங்கியினூடாகக் கடன் மற்றும் திறைசேறிப் பத்திரங்களின் அடிப்படையில் ஏலத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.
“மேலும், பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கியின் திறந்த சந்தை நடவடிக்கைகள் குறித்து வேறொரு அறிக்கை ஊடாக வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கும், மத்திய வங்கி, நேரடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இது அரசாங்கத்தின் கடன் வரம்பில் சேர்ந்து மேலும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது.
“2020 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாடாளுமன்றப் பிரேரணை ஒப்புதல் அளித்த கடன் வரம்பு ரூ. 721 பில்லியனாகும்.
“கடன் வரம்பை அண்மித்த பின்னர், பொதுக் கடனை வழங்குவதற்கான சட்டபூர்வ அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. இதன் விளைவு, இந்த நெருக்கடியை நிர்வகிக்க நிதி திரட்டுவதில் அரசாங்கம் பாரிய முடியாத சவால்களை எதிர்கொள்ளும். இந்தச் சட்ட சிக்கல்கள் காரணமாக, COVID-19 ஐ எதிர்த்து உலக வங்கி 128 மில்லியன் டொலர் (24.4 பில்லியன் டொலர்) வழங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலகு கடனைப் பெறுவது தாமதமாகும். எனவே, நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் அவசர, எதிர்பாராத தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடன்பெறும் வரம்பை அதிகரிக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறும் தான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த யோசனைக்கு முழு நாடாளுமன்றமுமே ஒத்துழைப்பு வழங்குமெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026