2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

நாளைய யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் படையினர் ஆர்வம் இல்லை-பொன்சேகா

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு இராணுவத்தினர் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்துக்கு சில தரப்பினர் மாத்திரமே ஆர்வம் காட்டி வருவதாகவும் ஜெனரல் பொன்சேகா கூறினார்.

இதேவேளை, அனோமா பொன்சேகாவின் தாயாரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கு தான் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டார்.

அனோமா பொன்சேகாவின் தாயாரது இறுதிக் கிரியைகளில் சற்று நேரத்துக்கு முன் கலந்துகொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X