2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

‘நினைவேந்தலை உள்ளூராட்சி மன்றங்கள் நடத்துவது பொருத்தமற்றது’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நேற்று (23) தெரிவித்தார். 

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக, முன்னாள் போராளியொருவர் சுட்டிக்காட்டியபோதே, மாவை எம்.பி, தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, இவ்விடயத்தை அவர் உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென, குறித்த முன்னாள் போராளி விடுத்த வேண்டுகோளை, அவர் ஏற்றுக்கொண்டார்.  

“திலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதற்கெதிராக சுமந்திரன் எம்.பி வாதாட இருப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணியில், நல்ல நாடகம் அரங்கேறுகிறது” என, குறித்த முன்னாள் போராளி தெரிவித்த கருத்தை, மாலை எம்.பி அவர் நிராகரித்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X