Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
J.A. George / 2021 மார்ச் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெண்களுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வீரப் பெண்கள் செய்த மகத்தான சேவையை அங்கீகரிப்பதற்காக நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
போர்வீரர்களின் தாய் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் போரின் போது அனுபவித்த கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும் பார்க்கும்போது, அவர்கள் முழு தேசத்தின் மதிப்புக்கு உரியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாடுகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் அளிக்கும் பங்களிப்பு மகத்தானது என்றும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025