Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுக்கூட்டங்கள் கூட்டப்படுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், இதுபோன்ற பொதுக்கூட்டங்களை, அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொவிட்-19இன் பதிவுகள் குறைந்து வரும் நிலையில், சிலர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக, அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்துவதன் மூலம், சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தாலும் அது மற்றையவர்களுக்கும் பரவும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால், மீண்டும் சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அபாயம் காணப்படுவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் எனவே, இவ்வாறு கூட்டங்களை நடத்துவது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் எனவே, இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
15 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
27 minute ago