2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு சந்தேகநபர் ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 15 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .