2021 மார்ச் 06, சனிக்கிழமை

பத்தேகமவில் மாணவிக்கு கொரோனா

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பத்தேகமவில்  பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலையின் தரம் 12 இல் கல்வி கற்று வந்த இவர் கடந்த 25 ஆம் திகதி இறுதியாக பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த நோயாளர் கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .