2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செய்தியாளர் மீது வீடு புகுந்து தாக்குதல்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம பிரதேச செய்தியாளர் துஷித குமார மற்றும் அவரது மனைவி மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (07) பிற்பகல் அளுத்கம, தர்கா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த சிலர் அவரையும் அவரது மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அளுத்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில், அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத வியாபாரங்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தி வந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .