2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பிரதமர் அலுவலக பணியாளர்கள் எவருக்கும் தொற்று இல்லை

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, விஜேராமையில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் ஆகியவற்றில்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என, பிரதமர் அலுவலகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இவ்வாறு ​தொற்றுக்குள்ளானவர், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவொன்றின் அதிகாரி என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அத்துடன் குறித்த தொற்றாளர் இந்த மாதம் 17ஆம் திகதி தொடக்கம் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .